கல்முனை மாநகர சபை தேர்தல் விரைவில் வரப் போகிறது ;பழையவர்களும் கட்சிக்குள் வரலாம் வரத்தான் வேண்டும்



 


(எம்.என். எம்.அப்ராஸ்) 


கல்முனை மாநகரசபைத் தேர்தல் நிச்சயம் இந்த வருடம் இறுதியில் அல்லது அடுத்த வருடம் வர உள்ளது இதில் உள்ள அனைத்து வட்டாராங்களை வென்றேடுக்க வேண்டும் என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். 

கல்முனை மாநகர சபையின் முன்னாள் பிரதிமுதல்வரும்,ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொருளாளரும், ரஹ்மத் மன்சூர் தலைமையில் கல்முனையில் நேற்று (19) மாலை இடம் பெற்ற சமகால அரசியல் கலந்துரையாடலில் கலந்து கொண்டு உரையாற்றும் போது ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் இவ்வாறு கருத்து தெரிவித்தார்.

 மேலும் அவர் அங்கு உரையாற்றுகையில் மாகாண சபைத் தேர்தல் இதற்கு அப்பால் வர உள்ளது இதில் பலருக்கு வாய்ப்பு உள்ளது அந்த வாய்ப்பில் எதிர் கால மாகாண ஆட்சியில் பதவிகளும் பாக்கி உள்ளது இதையேல்லாம் யாரும் தட்டி பறிக்க விரும்பினால் எல்லோரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்குள் வர வேண்டும் யாரும் வெளியில் நிற்க வேண்டிய அவசியமில்லை எலோருக்கும் இதை பகிரங்கமாகச் சொல்லி உள்ளோம் இப்போது ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்குள் முஷாரப் வந்து உள்ளார் அதாவுள்ளாவும் வருவது பற்றியும் பேசப்படுகிறது.

மேலும் இங்கே உள்ள ஏணைய பழையவர்களும் கட்சிக்குள் வரலாம் வரத்தான் வேண்டும் என பேசும் அழுத்தமாக பகிரங்க ரவூப் ஹக்கீம் அழைப்பு விடுத்தார் .

இதன் போது பாராளுமன்ற உறுப்பினர்களான நிசாம் காரியப்பர்,எம்.எஸ்.உதுமாலெப்பை,அப்துல் வாஸித், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பைசல் காசிம், முதுனபீன் முஷாரப்(பொத்துவில் பிரதேச சபை தவிசாளர்), கட்சியின் பிரதி செயலாளர் மன்சூர் ஏ காதர்,மாவட்ட செயலாளர் ஏ.சீ.சமால்தீன்,கல்முனை மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.எஸ்.எம்.நிசார்,நாவிதன்வெளி பிரதேச சபை உறுப்பினர் எம்.பி நவாஸ்,ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினர்கள்,பொது மக்கள் என பலர் கலந்து கொண்டனர்.