கொழும்பில் இருந்து மன்னார் நோக்கி சென்ற சொகுசு பேருந்து மதவாச்சிக்கும் மன்னாருக்கும் இடையில் விபத்தில், இருவர் உயிரிழந்துள்ளனர்.
மன்னார் நீதவான் நீதிமன்ற கெளரவ நீதிபதி றிஸ்வான் அவர்களும், அவரது பாதுகாப்பு உத்தியோகத்தர் ஆகியோர் உட்பட பலர் காயமுற்றுள்ளனர். இதேவேளை,இருவர் உயிரிழந்துள்ளனர் என்பதாக பிந்திக் கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த விபத்தில், காயமுற்ற கெளரவ நீதிபதி தற்சமயம் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கொழும்பிலிருந்து மன்னார் நேற்று செவ்வாய்க்கிழமை (21) நள்ளிரவு பயணிகளுடன் பயணித்த தனியார் சொகுசு பேருந்து ஒன்று மன்னார் - மதவாச்சி பிரதான வீதியின் பெரிய கட்டு பகுதியில் இன்று அதிகாலை விபத்திற்குள்ளாகியுள்ளது.
சாரதியின் நித்திரை கலக்கம், விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
குறித்த விபத்தில் பலர் காயமடைந்துள்ள நிலையில் செட்டிக்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், சம்பவ இடத்தில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


Post a Comment
Post a Comment