(வி.ரி.சகாதேவராஜா)
கிழக்கு மாகாண பாலர் பாடசாலைக் கல்விப் பணியக தலைமை காரியாலயத்தை மட்டக்களப்பிலிருந்து அகற்றுவதை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று (7) செவ்வாய்க்கிழமை பகல் அக்கரைப்பற்றில் முன்னெடுக்கப்பட்டது.
கல்முனை வலயம் சம்மாந்துறை வலயம் அக்கரைப்பற்று வலயம் திருக்கோயில் வலயம் ஆகியவற்றின்
முன்பள்ளி அபிவிருத்தி ஒன்றியத்தினால் இப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இப் போராட்டம் அக்கரைப்பற்றிலுள்ள அம்பாறை மாவட்ட பாலர் பாடசாலை கல்வி பணிமனைக்கு முன்பாக இடம்பெற்றது.
இதில் நூற்றுக்கு மேற்பட்ட முன்பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டார்கள்.
கைகளில் பதாகை ஏந்தியவாறு கோஷங்கள் எழுப்பி தங்களுடைய எதிர்ப்பினை வெளியிட்டனர்.இதில் மகஜர் ஒன்று கையளிக்கப்பட்டது.
பாலர் பாடசாலை செயலாற்றுப் பணியாளர் பாலர்பாடசாலை கல்வி பணியகப் பணிப்பாளர் அவர்களுக்கும் வழங்கப்பட்டது.
மற்றும் அக்கரைப்பற்று உதவி பிரதேச செயலாளர் வை. ராசித்திற்கும் வழங்கி வைக்கப்பட்டது.
மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது..
முன்பள்ளி கல்விப் பணியக மட்டக்களப்பு தலைமைக் காரியாலயத்தை இடமாற்றம் செய்வது குறித்து ஆட்சேபனை தெரிவித்தல்.
மேற்படி விடயம் தொடர்பாக தங்களின் மேலான கவனத்திற்கு நாங்கள் கொண்டுவரும் விடயம் யாதெனில்.
கடந்த 2010 ஆம் ஆண்டு தொடக்கம் இதுவரை காலமும் மட்டக்களப்பில் இயங்கிக் கொண்டு வரும் முன்பள்ளி கல்வி பணியகத்தின் தலைமைக் காரியாலயம் மட்டக்களப்பில் இயங்கி வருவதற்கான காரணம் கிழக்கு மாகாணத்தின் மத்திய பிரதேசமாக மட்டக்களப்பு இருப்பதனால் ஆகும்.
அம்பாறை மாவட்டத்தின் லகுகல, பாணம, பொத்துவில் தொடக்கம் அம்பாறை தமண, உஹன, பிரதேசங்களில் இருந்து மிகவும் சிரமப்பட்ட நிலையில் தான் மட்டக்களப்பு காரியாலயத்திற்கு ஆசிரியர்கள் அவர்களுடைய தேவைகளை பூர்த்தி செய்வதற்காக வந்து செல்கின்றார்கள்.


Post a Comment
Post a Comment