பிரித்தானியாவின் பிரைட்டன் அருகே பீஸ்ஹெவன் நகரில் உள்ள மசூதியில் இரு மா்ம நபா்கள் தீவைத்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.
பிரித்தானியா உள்ளிட்ட நாடுகளில் இஸ்லாமிய மற்றும் யூத வெறுப்பு குற்றங்கள் அதிகரித்து வரும் சூழலில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
முகமூடி அணிந்த இருவா் மசூதிக்குள் நுழைய முயன்றதாகவும், அது முடியாததால் அவா்கள் படிக்கட்டுகளில் பெற்றோலை ஊற்றி தீ வைத்ததாகவும் மசூதி நிா்வாகம் தெரிவித்துள்ளது.
இந்தச் சம்பவத்தின்போது மசூதிக்குள் பலா் இருந்ததாகவும் வெடிப்பு சத்தம் மற்றும் பிரதான நுழைவாயிலில் தீப்பிழம்புகளை கண்டு அவா்கள் தப்பினா் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


Post a Comment
Post a Comment