ஓய்வூதியம் பெறவுள்ள அரச உத்தியோகத்தர்களை தெளிவூட்டும் செயலமர்வு




 

வி.சுகிர்தகுமார்  


 தேசிய ஓய்வூதியர் தினத்தை முன்னிட்டு ஓய்வூதியம் பெறவுள்ள அரச உத்தியோகத்தர்களை தெளிவூட்டும் செயலமர்வு ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் நேற்று (10) நடைபெற்றது.
ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ் தலைமையில் உதவிப்பிரதேச செயலாளர் மா.இராமக்குட்டி ஒருங்கிணைப்பில் இடம்பெற்ற நிகழ்வில் ஓய்வூதியர்களின் மாவட்ட செயலக உத்தியோகத்தர் ஏ.எல்.சாலீப்தீன் வளவாளராக கலந்து கொண்டதுடன் பிரதேச செயலக கணக்காளர் அரசரெத்தினம் பிரதம இலிகிதர் ஜெயந்தி ஓய்வூதிய அபிவிருத்தி  உத்தியோகத்தர் சிறின் சித்தாரா  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அரசானது ஒக்டோபர் 8ஆம் திகதியை தேசிய ஓய்வூதியர் தினமாக பிரகடனப்படுத்தி தேசிய ரீதியில் நிகழ்வுகளை ஏற்பாடு செய்து நடாத்தி வருகின்றது.
இதன் ஒரு நிகழ்வாகவே அம்பாரை மாவட்டத்தில் உள்ள பல்வேறு திணைக்களங்களின் ஓய்வூதியம் பெறவுள்ள உத்தியோகத்தர்களை அழைத்து ஓய்வூதியம் தொடர்பான விளக்கங்களும் அவர்களின் பல்வேறு கேள்விகளுக்கும் பதிலும் வழங்கப்பட்டது.
அத்தோடு ஓய்வூதியம் பெறுவதற்கு முன்னர் அரச உத்தியோகத்தர்கள் நிறைவேற்ற வேண்டிய பொறுப்புக்கள் மற்றும் ஒன்லைன் மூலமாக ஓய்வூதிய திணைக்களத்தில் பதிவு செய்தல் போன்ற விடயங்களும் இங்கு தெளிவுபடுத்தப்பட்டது.