நூருல் ஹுதா உமர்
சர்வதேச சிறுவர் மற்றும் முதியோர் தினத்தை முன்னிட்டு சாய்ந்தமருது பிரதேச செயலக சமுர்த்தி வங்கி சங்க சமூக அபிவிருத்தி பிரிவின் ஏற்பாட்டில் சிறுவர், முதியோர் தினக் கொண்டாட்டம் வியாழக்கிழமை சாய்ந்தமருது கலாசார மத்திய நிலைய கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
சர்வதேச சிறுவர் தினம் “அன்பால் போஷியுங்கள் – உலகை வழிநடத்துங்கள்” எனும் தொனிப்பொருளில் சமுர்த்தி சமூக அபிவிருத்தி உதவியாளர் யூ.எல். ஜஃபர் நெறிப்படுத்தலில் சாய்ந்தமருது பிரதேச செயலக சமுர்த்தி தலைமை பீட முகாமையாளர் ஏ.சி.ஏ. நஜீம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம். முஹம்மது ஆஷிக் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
இந்நிகழ்வில் விசேட அதிதியாக என்.எஸ் இன்ஜினியரிங் முகாமைத்துவ பணிப்பாளர் பொறியியலாளர் எம்.யூ.எம்.நியாஸ், கெளரவ அதிதிகளாக சாய்ந்தமருது பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் எம்.ஐ. முவஃபிகா, சமுர்த்தி முகாமைத்துவ பணிப்பாளர் றியாத் ஏ. மஜீத், திட்ட முகாமையாளர் எஸ். றிபாயா, வங்கி முகாமையாளர் ஐ.எல்.எஸ். ஹிதாயா ஆகியோர் கலந்து கொண்டதுடன் வலய உதவியாளர் எம்.எஸ்.எம். நௌஷாத், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் களான எம்.ஆர்.எஸ். ஷாமிலா, ஏ.எம்.அபுல் ஹுதா, எம். எம்.ஜாபிர், எம்.ஐ.அன்சார், ஜே.எம். றம்சா, ஏ.கணேசமூர்த்தி, அபிவிருத்தி உத்தியோகத்தர்களான ஏ.எப். றிகாஸா ஷர்பீன், எம்.ஐ.சர்பீன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இந்நிகழ்வில் சிறுவர்களின் நடனங்கள், கதை கூறல், பாடல்கள், முதியோர்களின் நாட்டார் பாடல், கவிதை என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்நிகழ்வில் கலந்து கொண்ட சிறுவர்களுக்கும் முதியோர்களுக்கும் நினைவுச் சின்னங்கள், பரிசில்கள் என்பன அதிதிகளால் வழங்கி வைக்கப்பட்டன.



Post a Comment
Post a Comment