ஆலையடிவேம்பு பிரதேச இளைஞர் கழக சம்மேளனம் நடாத்திய 35 ஆவது பிரதேச விளையாட்டு விழா இன்று அக்கரைப்பற்று தர்மசங்கரி விளையாட்டு மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றது.
ஆலையடிவேம்பு பிரதேச செயலக இளைஞர் சேவை அதிகாரி ஜெயராஜ் ஒருங்கிணைப்பில் இடம்பெற்ற விளையாட்டு விழாவில் பிரதம அதிதியாக ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ் கலந்து கொண்டதுடன் கௌரவ அதிதியாக ஆலையடிவேம்பு பிரதேச சபை தவிசாளர் ஆ.தர்மதாச தேசிய இளைஞர் சேவை மன்ற மாவட்ட உதவிப்பணிப்பாளர் கங்கா சகாரிக தேசிய இளைஞர் மன்ற உதவிப்பணிப்பாளர் முபாறக்அலி மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி ஸ்ரீவர்த்தன ஆலையடிவேம்பு பிரதேச இளைஞர் கழக தலைவர் மிருஜன் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.அதிதிகள் வரவேற்கப்பட்டு தேசிய கொடியேற்றப்பட்ட ஒலிம்பிக் தீபம் ஏற்றப்பட்டது. ஒலிம்பிக் தீபத்தினை பிரதேச செயலாளர் ஏற்றி ஆரம்பித்து வைத்தார். இதன் பின்னராக போட்டி நிகழ்வுகள் இடம்பெற்றன.
போட்டிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கும் போதே வெற்றி பெற்ற கழகங்கள் மற்றும் வீரர்களுக்கான சான்றிதழ்கள் நினைவுச்சின்னங்கள் என்பன அதிதிகளால் வழங்கி வைக்கப்பட்;டன.
இவ்விளையாட்டு விழாவிற்காக பல்வேறு தரப்பினரும் உதவிகளை வழங்கிய நிலையில் ஆலையடிவேம்பு பிரதேச சபையின் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் இணைந்து ஒரு மாத சம்பளத்தினை வெற்றிக்கிண்ணங்கள் பெற்றுக்கொள்வதற்காக அன்பளிப்பாக வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.


Post a Comment
Post a Comment