வி.சுகிர்தகுமார்
சரிகமப பாடல் போட்டியில் கலந்து கொண்டு இறுதிப்போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள நம்நாட்டின் கலைஞன் சுகிர்தராஜா சபேசனுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தமிழ் முஸ்லிம் அமைப்புக்கள் இணைந்து அக்கரைப்பற்று மணிக்கூட்டுக்கோபுர சந்தியில் பல்வேறு நிகழ்வுகள் நேற்று இடம்பெற்றன.
அக்கரைப்பற்று இந்து இளைஞர் மன்றம் அக்கரைப்பற்று மாநகர சபை ஆலையடிவேம்பு பிரதேச சபை உள்ளிட்டவர்கள் இணைந்து வாழ்த்து தெரிவித்ததோடு சபேசனுக்கு வாக்களிக்க வேண்டும் என பதாதைகளையும் மணிக்கூட்;டு கோபுர சந்தியில் நிறுவினர்.
பாராட்டு தெரிவிக்கும் நிகழ்வுகளில் மாநகர சபையின் முதல்வர் ஏ.எல்.எம்.அதாவுல்லா ஆலையடிவேம்பு பிரதேச சபை தவிசாளர் ஆர்.தர்மதாசா அக்கரைப்பற்று இந்து இளைஞர் மன்ற தலைவர் த.கயிலாயபி;ள்ளை உப தலைவரும் மத்தியஸ்த சபையின் தலைவருமான ஸ்ரீ மணிவண்ணன் மற்றும் அக்கரைப்பற்று வர்த்தகர் சங்க தலைவர் மாநாகர சபை முதல்வரின் இணைப்பாளர் தாஹா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இங்கு சபேசனுக்கு வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டதுடன் பலரும் பல்வேறு கருத்துக்களை ஊடகங்களுக்கு வழங்கினர்.
தொடர்ந்து பட்டாசுகள் கொழுத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதுடன் சபேசனுக்கு வாழ்த்து தெரிவிக்கும் பதாதைகளும் காட்சிப்படுத்தப்பட்டன.

Post a Comment
Post a Comment