ஓட்டமாவடி வாவிக்கரை கொங்ரீட் வீதி திறந்து வைப்பு



 


ஓட்டமாவடி வாவிக்கரை கொங்ரீட் வீதி திறந்து வைப்பு


இருபது இலட்சம் ரூபாய் செலவில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் ஓட்டமாவடி பிரதான பாலத்திற்கு அருகாமையில் அமைந்துள்ள வாவிக்கரைக்கு செல்லும் வீதியானது கொங்ரீட் வீதியாக மாற்றுவதற்கான அடிக்கல்லினை தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பிரதேச செயலகங்களுக்கான ஒருங்கிணைப்புக்குழு தலைவருமான கந்தசாமி பிரபுவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.


அந்தவகையில், கொங்ரீட் வீதியாக  பூரணமாக்கப்பட்டுள்ள குறித்த வீதியானது 05-11-2025 புதன்கிழை பிரபு எம்.பியினால் உத்தியோக பூர்வமாக மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டதுடன், ஏற்கனவே குறித்த வாவிக்கரையானது கேட்பார் பார்பார் அற்ற நிலையிலும், போதைப்பொருள் பாவனையாளர்களின் வாஸ்தஸ்தலமாக இருந்து வந்த நிலையிலும் கோறளைப்பற்று மேற்கு  ஓட்டமாவடி பிரதேச செயலாளர் ஏ.தாஹிரின் முயற்சியினால் தேசிய மக்கள் சக்தி அரசின் 3 மில்லியன் நிதி ஒதுக்கீட்டின் கீழ் பிரபு எம்.பியின் பங்கு பற்றுதலுடனும் வாவிக்கரையானது உள்ளூர் சுற்றுலாப்பயணிகளும் பிரதேச மக்களும் ஓய்வெடுத்துக்கொள்ளும்  இடமாக மாற்றியமைக்கப்பட்டமை முக்கிய விடயமாகும்.


அத்தோடு , குறித்த வாவிக்கரையினை அண்டிய பிரதேசத்தினை மேலதீக வசதிகளுடன் அபிவிருத்தி செய்து  மாவட்டத்தில் சிறந்ததொரு உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றுலாத்தளமாகவும்,  மக்கள் ஓய்வெடுக்கின்ற இடமாகவும் மாற்றியமைத்து தருவதாக குறித்த நிகழ்வில் உரையாற்றும் பொழுது   பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு மேற்கண்டவாறு தெரிவித்தார்.


குறித்த நிகழ்வில் கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலாளர் ஏ.தாஹிர், பிரதேச சபை உறுப்பினர்களான ஏ.எல்.சமீம், அப்துல் லத்தீப், எம்.ஏ.சி.நியாஸ்த்தீன், தேசிய மக்கள் சக்தியின் பிரதேச நிறை வேற்றுக்குழு உறுப்பினர்கள், அரசியல் செயற்பாட்டாளர்கள், ஆர்.டி.எஸ்.சங்க உறுப்பினர்கள், பலரும் கலந்து கொண்டார்கள்.