ஆசிரிய வாண்மைத்துவ சான்றிதழ் வழங்கல் நிகழ்வு



 

அம்பாறை மாவட்டம் திருக்கோவில்  கல்வி வலய ஆசிரியர்  வாண்மைத்துவ சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு இன்றைய தினம் திருகோவில் கல்வி வலய ஆசிரியர்  வாண்மை விருத்தி நிலைய ஒன்று கூடல் மண்டபத்தில் திரு. N. சுதாகரன் ( முகாமையாளர், ஆசிரியர் வாண்மை விருத்தி நிலையம் திருக்கோவில்)  அவர்களின் தலைமையில் இடம்பெற்றது...


இதில்E.B 2-I மற்றும் 2-II ஆகிய தரங்களில்  வினைத்திறன் தடைதாண்டல் பரீட்சையில் சித்திபெற்ற  ஆசிரியர்களுக்கான  சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டன..


இந் நிகழ்வில் பிரதம அதிதியாக திருக்கோவில் கல்வி வலயத்தின்  வலயக்கல்விப் பணிப்பாளர் திரு.R.உதயகுமார் அவர்கள் கலந்து சிறப்பித்தார்...


மேலும் இந்நிகழ்வில்  கௌரவ அதிதிகளாக திரு. S. விக்னேஸ்வரன் ( விரிவுரையாளர், PDCT - திருக்கோவில்) ,திரு. S. I. M ரபியூஸ் ( விரிவுரையாளர், PDCT - திருக்கோவில்), திருமதி. M. J. றிஷ்மி ( விரிவுரையாளர், PDCT - திருக்கோவில் ஆகியோர் கலந்து கொண்டனர்....

 

இந்நிகழ்வில் 2-I மற்றும் 2-II தரத்தைச் சேர்ந்த 164 ஆசிரியர்கள் சான்றிதழ்களை பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது...