(வி.ரி.சகாதேவராஜா)
உதவும் பொற்கரங்கள் அமைப்பினால் (கனடா.) நாவிதன்வெளி பிரதேச 06ம் கிராமத்தில் வசதிகளின்றி வசிக்கும் பாடசாலை மாணவி ஒருவருக்கு அவரது கல்வி நடவடிக்கைகளுக்காக துவிச்சக்கர வண்டி மற்றும் மாதாந்த கொடுப்பனவு வழங்கி வைக்கப்பட்டது.
குறித்த மாணவி நாவிதன்வெளி சொறிக்கல்முனை கொலிகுறோஸ் மகா வித்தியாலயத்தில் உயர்தரம் கலைப்பிரிவில் கல்விகற்பவர்.
குறித்த தங்கராசா சுகனிதா என்ற மாணவி 06ம் கிராமத்திலிருந்து சுமார் மூன்றரை கிலோ மீட்டர் தூரத்திலுள்ள சொறிக்கல்முனை ஹொலிகுறோஸ் பாடசாலைக்கு நடையாகச் சென்று தனது உயர் கல்வியை தொடர்ந்து வந்தார் .
இந் நிலையில் அவ்வாறு சென்று கல்வி கற்பதில் இடையூறுகள் ஏற்பட்டன.
இது தொடர்பாக உதவும் பொற்கரங்கள் அமைப்பின் ஸ்தாபகரும்,சமூக சேவகருமான விசு கணபதிப்பிள்ளையிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டது .
அதன் பேரில் கனடாவில் வசிக்கும் சமூக சேவையாளர் கனகலிங்கம் புவியின் நிதி உதவி கொண்டு மாணவிக்கான துவிசக்கர வண்டி மற்றும் கல்வி நடவடிக்கைகளுக்காக மாதாந்த கொடுப்பனவும் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டன.
அதன் பிரகாரம் குறித்த மாணவிக்கு துவிச்சக்கரவண்டியும்,2026 ஜனவரி, பெப்ரவரி மாதங்களுக்கான மாதாந்தர கொடுப்பனவும் வழங்கி வைக்கப்பட்டது..
இந்நிகழ்வில் உதவும் பொற்கரங்கள் அமைப்பின் தாயக இணைப்பாளர் என்.சௌவியதாசன், நாவிதன்வெளி பிரதேச சமூக சேவை உத்தியோகத்தர் குரூஸ் குணரத்தினம் , ஓய்வு பெற்ற உதவிக் கல்வி பணிப்பாளர் கண. வரதராஜன் ஆகியோர் கலந்து கொண்டு இவற்றை வழங்கி வைத்தனர்.
உதவியை வழங்கிய சமூக சேவையாளர் கனகலிங்கம் புவி மற்றும் அவரது குடும்பத்தினருக்கும். தொடர்ச்சியாக கல்வி நடவடிக்கை, மற்றும் பல்வேறுபட்ட உதவிகளை மக்களுக்கு வழங்கி வருகின்ற தமிழ் பணிசெம்மல்,சமூக சேவையாளர் விசு கணபதிப்பிள்ளைக்கும். மாணவி, குடும்பத்தினராலும் மனமார்ந்த நன்றிகள் தெரிவிக்கப்பட்டது.
புவி மற்றும் அவரது குடும்பத்தினருக்கும். தொடர்ச்சியாக கல்வி நடவடிக்கை, மற்றும் பல்வேறுபட்ட உதவிகளை மக்களுக்கு வழங்கி வருகின்ற தமிழ் பணிசெம்மல்,சமூக சேவையாளர் விசு கணபதிப்பிள்ளைக்கும். மாணவி, குடும்பத்தினராலும் மனமார்ந்த நன்றிகள் தெரிவிக்கப்பட்டது.
Post a Comment
Post a Comment