திருக்கோவில்,ஆதாரவைத்திய சாலைக்கு முன்பாக



 

Rep/Yathursan

திருக்கோவில் பிரதேசத்தில் ஆதாரவைத்திய சாலைக்கு முன்பாக பழமை வாய்ந்த  புளியமரம் ஒன்று  தற்போது ஏற்பட்டுள்ள காற்றுடன் கூடிய மழையினால் புடைசாய்ந்தது  பிரதான  வீதியில் விழுந்தது ...


இதனால் திருக்கோவில் அக்கரைப்பற்று பிரதான வீதி தடைப்பட்டது...


இதனை அகற்றும் பணி பிரதேச செயலாளரின் நேரடி  கண்காணிப்பில் இடம்பெற்றது..


குறித்த தகவல் வழங்கப்பட்ட உடன் களத்திற்கு விரைந்த திருக்கோவில் பிரதேச செயலாளர் தங்கையா கஜேந்திரன் அவர்கள் இராணுவத்தினருடன் தொடர்பு கொண்டு குறித்த மரத்தினை அகற்ற நடவடிக்கை மேற்கொண்டார் 


குறித்த தகவலுக்கு அமைவாக குறித்த பகுதிக்கு விரைந்த இராணுவத்தினர்  மற்றும RDA ஊழியர்கள் மரத்தினை அகற்றும் நடவடிக்கையினை மேற்கொண்டனர் மேலும் திருக்கோவில் பிரதேச இளைஞர்களும் பொதுமக்களும் திருக்கோவில் பிரதேச சபை ஊழியர்களும் இணைந்து குறித்த மரத்தினை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்


மேலும் பிரதான விதியால் வாகனம் செல்ல தடைப்பட்டு வாகன நெரிசல் காணப்பட்டது  இதனை திருக்கோவில் பொலிஸ் நிலையப்பொறுபதிகாரியின் உதவியுடன் வாகனங்கள் மாற்று வழிகளில் அனுப்பட்டது 


பின்னர் வெட்ட பட்ட மரத்துண்டுகள் கிளைகள் என்பன திருக்கோவில் பிரதேச சபையின் ஊழவு இயந்திரங்கள் மற்றும் இராணுவத்தினரின் வாகனத்தின் உதவியுடன் அங்கிருந்து அகற்றப்பட்டதுடன் பிரதான  வீதி  வழமைக்கு திரும்பியுள்ளது குறிப்பிடத்தக்கது...


மேலும் குறித்த மரத்தினால் சேதமடைந்த மின்இணைப்புக்களை திருத்தி அமைக்கும் பணியில் இலங்கை மின்சார சபை ஊழியர்  துரிதமாக செயற்பட்டு வருகின்றனர்....