திருகோணமலையில் நிறுவப்பட்ட புத்தர் சிலை இரவோடிரவாக அகற்றம்



 


திருகோணமலையில் நேற்று நிறுவப்பட்ட புத்தர் சிலை தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டையடுத்து பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவின் உத்தரவையடுத்து நேற்றிரவே சிலை அகற்றப்பட்டுள்ளதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் எம். பி இராசமணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.


சட்டம் அனைவருக்கும் சமம் என்ற வகையில் அரசு செயற்படுவதையொட்டி அவர் அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளார்