வடமத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் 200 மில்லிமீட்டருக்கும் அதிகமான கனமழை பெய்யக்கூடும்.
வடக்கு, மத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் மேற்கு மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் 150 மில்லிமீட்டருக்கும் அதிகமான மழை பெய்யக்கூடும்.
மற்ற மாகாணங்களில் 100 மில்லிமீட்டருக்கும் அதிகமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.
இதேவேளை இவ்வாறான சீரற்ற வானிலையாலும், வெள்ளம் மற்றும் பிற தடைகள் காரணமாகவும் அனைத்து வழித்தடங்களிலும் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.


Post a Comment
Post a Comment