(செய்தியாளர், பாத்திமா றிப்கா)
முதல் தடவையாக நவீன தொழில்நுட்பத்துடன் பெண்களை இணைக்கும் புதிய திட்டம் காத்தான் குடியில் அங்குரார்பணம்.
(செய்தியாளர், பாத்திமா றிப்கா)
பெண்களின் வாழ்வாதாரத்தினை நவீன தொழில் வாய்ப்பு மூலமாக வழங்கும் வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் முதல் தடவையாக நவீன தொழில்நுட்பத்துடன் பெண்களை இணைக்கும் புதிய திட்டமொன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
டெலன்ட் சமூக அமைப்பின் ஏற்பாட்டில் நாஸ் கெம்பஸின் ஆலோசகர் வைத்திய கலாநிதி டொக்டர் ஐ.எல்.எம். றிபாஸ் தலைமையில் காத்தான்குடி நாஸ் கெம்பஸ் பிரதான மண்டபத்தில் நேற்று இடம் பெற்றது.
இதன் போது நவீன தொழில்நுட்பம், சந்தை வாய்ப்பு தொடர்பாக, ஒளிபரப்பாளரும் ஊடகவியலாளருமான எம்.எஸ்.எம். சஜீ விரிவுரையினை வழங்கியதுடன் அதன் செயற்பாடுகள் மற்றும் தொழில் விருத்தி தொடர்பாக நாஸ் கெம்பஸின் பகுதி நேர மாணவ விரிவுரையாளர்களான எம்.என்.என். கரீப், றுஸ்த் நௌபர், நவீன விற்பனை வாய்ப்பின் சமூக ஊடக உக்திகள் எனும் தலைப்பில் ஊடகவியலாளர் சஜித் அஹமட், சந்தை விரிவாக்கள் மற்றும் நுணுக்குகள் தொடர்பாக சட்டமாணி ஏ.ஜி.எம். ஸாமில் ஆகியோர் பங்கேற்று விரிவுரையாற்றினர்.
இதன் போது அதிகளவிலான சுய தொழில் பெண் ஆர்வலர்கள் பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது.


Post a Comment
Post a Comment