Flood Relief – 241 Brigade Commander
இலங்கை இராணுவத்தினரின் வெள்ள அனர்த்த மனிதாபிமான நிவாரணப் பணிகள் அம்பாரை மாவட்த்தில் இடம்பெற்று வருகின்றது...
இதற்கமைவாக அக்கரைப்பற்று 241 ஆம் காலாட் படைப்பிரிவின் ஏற்பாட்டில் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட வாச்சிக்குடா பிரிவில் 100 குடும்பங்களுக்கான உலர் உணவுப்பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.
241ஆம் படைப்பிவின் கட்டளை அதிகாரி பிரிகேடியர் சுகத் திசாநாயக்க தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் 24 ஆவது காலாட்படைப்பிரிவின் அம்பாரை மாவட்ட கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் ஜயவீர மற்றும் உதவி கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் டயஸ் இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபான பிராந்திய முகாமையாளர் சஜீவ் ஆலையடிவேம்பு பிரதேச செயலக கிராம நிருவாக அதிகாரி பரிமளவாணி சில்வெஸ்டர் கிராம உத்தியோகத்தர் சுஜித் மதுசங்க ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் வெள்ள அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட 100 குடும்பங்களுக்கு உலர் உணவுப்பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.
நிவாரணத்தினை பெற்றுக்கொண்ட மக்கள் இராணுவத்தினருக்கு நன்றி தெரிவித்தனர்.


Post a Comment
Post a Comment