சிட்னி துப்பாக்கிச்சூடு - உயிரிழந்தோர் எண்ணிக்கை 12



 


அவுஸ்திரேலிய சிட்னி பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12ஆக அதிகரித்துள்ளது.


குறித்த துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 10 பேர் உயிரிழந்துள்ளதாக முன்னர் தகவல்கள் வெளியானது.


இந்நிலையில், துப்பாக்கிச்சூடு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.