நூருல் ஹுதா உமர்
இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் இணைந்து இளைஞர் எழுச்சி முகாம் 2025 ஆம் ஆண்டுக்கான நிகழ்வு பொத்துவில் பிரதேச செயலக இளைஞர் சேவை அதிகாரி அ.க. அன்வர் அவர்களின் தலைமையில் பொத்துவில் பிரதேச செயலக கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.
"மனோநிலை, திறன்கள், ஆளுமை, தலைமைத்துவம், தேசத்தை கட்டியெழுப்பல்" ஆகிய முக்கிய தலைப்புகளை உள்ளடக்கி, தலைமைத்துவத்தை வளர்ப்பதற்கான குழு விளையாட்டு மற்றும் படைப்பு திறன்களை வளர்த்து அதன் மூலம் தலைமைத்துவ திறன்களை வளர்த்துக் கொள்ளுங்கள் என்ற தொனிப்பொருளில் ஆரம்பமானது.
இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக பொத்துவில் பிரதேச செயலாளர் எம்.ஏ.சி. அஹமட் நசீல் மற்றும் அதிதிகளாக கணக்காளர் எஸ்.எப்.சப்னா, நிருவாக உத்தியோகத்தர் எம்.எம்.சுபைர், அம்பாறை மாவட்ட இளைஞர் சேவை மன்றத்தின் உதவிப் பணிப்பாளர் ஏ.டபிள்யூ.எஸ். கங்கா சாகரிக்கா, மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி ஆர்.எம்.சிறிவர்த்தன, முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.ஜெஸ்மீர் மற்றும் வளவாளர்கள் மற்றும் இளைஞர்கள் யுவதிகள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் பங்குபற்றிய இளைஞர்களுக்கு சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டது


Post a Comment
Post a Comment