Rep/TrincoVoice
சுனாமி அனர்த்தத்தின் 21வது வருட ஞாபகார்த்த தினமும், உயிரிழந்தவர்களின் ஈடேற்றத்திற்கான துஆ பிரார்த்தனையும் மூதூர் -தக்வாநகர் ஜும்ஆ பள்ளிவாசலில் இன்று வெள்ளிக்கிழமை (26) காலை இடம்பெற்றது.
மூதூர் ஈராக் விளையாட்டுக்கழகம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.
இதன்போது சுனாமி அனர்த்தத்தில் உயிர்நீத்தவர்களின் ஆத்ம சாந்தி வேண்டிய விசேட துஆ பிரார்த்தனை இடம்பெற்றதுது.
இதில் அதிகளவான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
அதேவேளை சுனாமி அனர்த்தத்தினால் மூதூரில் 286 பேர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
சுனாமி ஞாபகார்த்த தினத்தை முன்னிட்டு மூதூரில் உள்ள மீனவர்கள் கடலுக்குச் செல்லாது படகுகள் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்ததையும் காணக்கூடியதாக உள்ளது.


Post a Comment
Post a Comment