பொத்துவில் பிரதேச பாடசாலைகளுக்கு கள விஜயம்!!!
பொத்துவில் பிரதேசத்திலுள்ள பாடசாலைகளின் பௌதீக குறைபாடுகளை கேட்டறியும் பொருட்டு இன்று (22.12.2025) திங்கட்கிழமை அம்பாறை மாவட்ட கரையோர பிரதேசங்களின் ஒருங்கிணைப்பு குழுத் தலைவரும், அரசியலமைப்பு பேரவையின் உறுப்பினரும், கௌரவ பாராளுமன்ற உறுப்பினருமான அபூபக்கர் ஆதம்பாவா அவர்கள் பொத்துவில் ஒஸ்மானியா கனிஷ்ட பாடசாலை, நூறானியா வித்தியாலயம், தாருல் பலாஹ் முஸ்லிம் வித்தியாலயம் மற்றும் அல் - பஹ்ரியா வித்தியாலயம் ஆகியவற்றிக்கு விஷேட களப் பயணம் மேற்கொண்டு மேற்படி பாடசாலைகளுடைய பௌதீக ரீதியான குறைபாடுகளை கேட்டறிந்து,
குறிப்பாக அண்மையில் ஏற்பட்ட மற்றும் வெள்ள அனர்த்ததால் சேதமடைந்த பொத்துவில் ஒஸ்மானியா கனிஷ்ட பாடசாலைக்கு தற்காலிக கட்டுமானத்திற்காக 01 மில்லியன் ரூபாய் கிழக்கு மாகாண கல்வி அமைச்சினால் பாராளுமன்ற உறுப்பினரின் கோரிக்கைக்கமைய அவசரமாக ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதனுடைய நிர்மானிப்பு தொடர்பாக பொத்துவில் கோட்டக்கல்விப்பணிப்பாளர்,குறித்த பாடசாலை அதிபர் மற்றும் பாடசாலை சமூகத்தோடு குறைபாடுகள் தொடர்பாக கலந்துரையாடினார்.
மேலும் 1.5 மில்லியன் ரூபாயினை பெற்று இப்பாடசாலையின் தற்காலிக கட்டிடடத்தை புனர்மானித்து மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகளை உரிய தரப்பினரோடு கலந்துரையாடி பெற்றுக்கொடுக்க உறுதியளித்தார்..
இந்நிகழ்வில் பொத்துவில் கோட்டக்கல்விப்பணிப்பாளர், குறித்த பாடசாலைகளின் அதிபர்களர், பொத்துவில் தொகுதி அமைப்பாளர் தோழர் ரவி, பிரதேச அமைப்பாளர தோழர் ஆதம் சலீம், பிரதேச சபை உறுப்பிர்களான மஃரூப், புனிதன் மற்றும் பொத்துவில் பிரதேச செயற்பாட்டாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்..
ஊடகப்பிரிவு.


Post a Comment
Post a Comment