முதன்மைப்படுத்தி வழங்கப்பட்டு வருகின்றது. அதை போன்று அரசாங்கம், அரச சாரா நிறுவனங்களும் இச்செயற்திட்டத்தில் பாரிய ஒரு பங்கினை வகுத்து வருகின்றது.
இவ்வனர்த்தத்தில் முழுமையாக தங்கள் வாழ்விடத்தை இழந்தவர்கள், பகுதியாக தங்கள் வாழ்விடத்தை இழந்தவர்கள் மற்றும் அனர்த்தத்தின் அவதானத்தில் இருந்து வாழ்விடங்களை கொண்ட மக்கள் கடந்த 02 வாரமாக முகாம்களில் தஞ்சமடைந்தார்கள். தற்போது அவதானமான இடங்களிலிருந்து முகாம்களில் தங்கியிருந்த மக்கள் படிப்படியாக தங்கள் வாழ்விடத்தை நோக்கி சென்று கொண்டு உள்ளார்கள். மீண்டும் மழை காலம் ஏற்பட்டால் மிக அவதானமான பகுதிகளில் வாழும் மக்களும், பூரணமாக தங்கள் வாழ்விடத்தின் மக்களும், பகுதியளவில் வாழ்விடத்தை இழந்த மக்களும் அனர்த்த முகாம்களில் பதிவாகி இருக்கின்றார்கள். அதை போன்று உறவினர் வீடுகளிலும் வசித்து வருகின்றார்கள்.
இம் மக்களின் வாழ்வாதாரம் தேயிலை தோட்டங்களிலும், கூலி வேலைக்கு செல்பவர்களாகவும், நகர்ப்புறங்களில் வியாபார புறங்களில் வேலை செய்பவர்களாக பெரும்பாலானவர்கள் காணப்படுகின்றார்கள். இவர்களின் வாழ்வாதார வீழ்ச்சி என்பது மிக பாரிய பிரச்சினையாக உள்ளது. தேயிலை தோட்டங்களில் வேலை செய்ய இயலாத தன்மை, வியாபார தலங்களுக்கு செல்ல பாதை இல்லாத தன்மை காரணமாக நேரடியாக இவ்வனரத்தத்தில் பாதிக்கப்பட்டவர்களுடன் பாதிக்கப்படாத மக்களும் தங்களுடைய அன்றாட வாழ்க்கையைக் கொண்டு நடாத்த முடியாத துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது. பெருந்தோட்டத்தை பொறுத்தவரையில் பெரும்பாலானவர் நாட்கூலிகளாக சென்று சிறு சேமிப்பை கைவசம் வைத்திருப்பவர்கள். அந்த சேமிப்பு தற்போது முடிந்த நிலையில் பாதிக்கப்படாத மக்களும் நிர்க்கதியாக நிற்கும் நிலையினை இந்த தித்வா புயல் ஏற்படுத்தியுள்ளது.
எனவே மனித அபிவிருத்தி தாபனம் தித்வா அனர்த்தத்தில் நேரடியாக, மறைமுகமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு கிராம மட்ட குழுக்களை உருவாக்கி மிக நேர்த்தியான முறையில் நேரடியாக பாதிக்கப்பட்ட, மறைமுகமாக பாதிக்கப்பட்ட சேவைகள் வழங்கி வருகின்றது.
குடியேற்றம் நிகழ்வுகள் படிப்படியாக நடைபெறும்.


Post a Comment
Post a Comment