சாய்ந்தமருது பிரிவில்,(அம்மை நோய்) பற்றிய விழிப்பூட்டல்






(ஹுதா உமர்


சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் தற்போது அதிகரித்து வரும் chicken pox (அம்மை நோய்) காரணமாக சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜே.மதன் அவர்களின் வழிகாட்டலின் கீழ் பொது சுகாதார பரிசோதகர்கள் அடங்கிய குழு சாய்ந்தமருது 3 மற்றும் சாய்ந்தமருது வொலிவோரியன் கிராமத்தில் சுகநலக் கல்வி வழங்கும் செயற்பாட்டில் ஈடுபட்டனர்.

இந்த செயற்பாட்டின் போது அம்மை நோய் (Chickenpox) நோயால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் மற்றும் இந்த நோயிலிருந்து பாதுகாக்கும் முறை போன்றவற்றை பொதுமக்களுக்கு சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய அதிகாரிகள் வழங்கினர்.
?