சர்வதேச அரபு மொழி தினம் - 2025
கல்வி அமைச்சின் சுற்று நிறுபத்திற்கு அமைவாக “சர்வதேச அரபுமொழி தினம் - 2025” அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரி (தே.பா)யில் 2025.12.18ஆம் திகதி (இன்று) பாடசாலை அதிபர் ஏ.எல் நஸீபா தலைமையில் அதாஉல்லாஹ் கேட்போர் கூடத்தில் மிக விமர்சியாக இடம்பெற்றது.
பிரதம அதிதியாக ஏ.எல் அப்துல் மஜீத் - பிரதிக் கல்விப் பணிப்பாளர் அவர்களும் விசேட அதிதியாக ஏ.எம் ராஸிக் - சிரேஸ்ட விரிவுரையாளர் (தென்கிழக்குப் பல்கலைகழகம்-இலங்கை) அவர்களும் கௌரவ அதிதிகளாக பீ.ஜியனா - பிரதிக் கல்விப் பணிப்பாளர், ஏ.ஆர்.ஏ மனாப் - உதவிக் கல்விப் பணிப்பாளர் - இஸ்லாம் மற்றும் அரபு, பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், பாடசாலை கல்விசார், கல்விசாரா உத்தியோகத்தர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.


Post a Comment
Post a Comment