மலையகத்தில் அரச காணிகளை வழங்கி குடியமர்த்தல் நல்லது; அவர்கள் விரும்பினால் வடகிழக்கில் குடியேற்றலாம்!





  (வி.ரி.சகாதேவராஜா)

மலையகத்தில்  பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு அவரவர் பகுதியில் அரச காணிகளை வழங்கி குடியமர்த்தல் நல்லது. மாறாக 
அவர்கள் விரும்பினால் வடகிழக்கில் குடியேற்றுவதில் தவறில்லை!

நுவரேலியா லிந்துல சரஸ்வதி மகா வித்தியால முன்னாள் அதிபர் பி.என்.சிவலிங்கம் தெரிவித்தார்.
மலையக மக்களை வடக்கு கிழக்கில் குடியேற்றுவது தொடர்பாக பேசப்படுகிறதே. அது தொடர்பாக பூண்டுலோயாவைச் சேர்ந்த அவரிடம் நேரில் சென்று கேட்டபோது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில்.

இந்தியாவில் இருந்து இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு குடியேறியவர்கள் மலையகத் தமிழர்கள். அவர்கள் இங்கே எப்படி பூர்வீக குடியாக இருந்தார்களோ அவர்கள் இனிமேலும் இலங்கையில் இருக்க வேண்டியவர்கள். அவர்களை வேறு பிரதேசங்களில் குடியேற்றுவது என்பது அவர்களுடைய  வாழ்வாதாரத்தை தேடிக்கொள்வதில் சில சிக்கல்கள் ஏற்படலாம். ஆகவே அதற்கு அவர்களை அவர்கள் மாற்றிக்கொள்வார்களானால் அவர்கள் எந்த ஒரு பிரதேசத்திலும் குடியேறுவதற்கான வாய்ப்பு இருக்கிறது. ஆகவே  அவர்கள் ஏற்றுக் கொள்ளக் கூடியவர்களாக இருந்து அவர்கள் விரும்பினால் அந்த குடியேற்றங்களை செய்வதை நான் மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்கிறேன். என்றார்.

 எந்தவித எதிர்ப்பும் கிடையாது.

 இருந்த போதும் இவர்கள் இந்த மலையக பிரதேசத்திலேயே வாழ்ந்து பழகிய ஒரு குடிகள் என்பதனால் அவர்களுக்கு முடியுமான வரையில் அவர்கள் இருக்கும் இந்த பிரதேசத்தில் குடியேற்ற வேண்டும்.இல்லாத சந்தர்ப்பத்தில் அந்த சந்தர்ப்பத்தை வழங்கலாம் .

 அவர்கள் குடியிருக்கும் அந்த இடத்திலேயே இருக்கும் அரச காணிகளை பகிர்ந்து அவர்களுக்கு புதிதாக வீடுகளை அமைப்பதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கும் சந்தர்ப்பத்தில் அவர்களுடைய வாழ்க்கை நிலை அவர்களுடைய உறவுகளுடன் சேர்ந்து இருக்கக்கூடிய ஒரு சந்தர்ப்பமும் அவர்களுக்கு வாய்க்கக் கூடியதாக இருக்கும்.

 ஆகவே ஒன்று இல்லாவிட்டால் ஒன்றை நாங்கள் இதனை ஏற்றுக் கொள்ளலாம். முற்றாக நாங்கள் வடக்கு கிழக்கில் குடியேற்ற வேண்டும் என்றோ அல்லது அவர்கள் இங்கேதான் இருக்க வேண்டும் என்றோ கூற முடியாது.
அது அவர்களைப் பொறுத்தது என்றார்.