வடக்கு- கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சின் முன்னாள் செயலாளர் காதர் முகைதீன் காலமானார்!!



 


வடக்கு- கிழக்கு மாகாணங்களின் கல்வி அமைச்சின் முன்னாள் கல்வி  செயலாளர்.

அல்- ஹாஜ்.எம்.ஏ.சி. முகைதீன் சற்று முன் கொழும்பில் காலமாகினார். மரணிக்கும்

சமயம் இவரது வயது 88 ஆகும்.


இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி

இராஜி ஊன்.


அன்னார் அக்கரைப்பற்றை பிறப்பிடமாக

கொண்டும் சாய்ந்தமருதுவில் புகுவிடமாக

கொண்டவர். அரச சேவையிலிருந்து ஓய்வு

பெற்ற பின் கொழும்பு தெஹிவளையில்

வசித்து வந்தார்.


இலங்கை கல்வி நிருவாக சேவையின் மிக

மூத்த அதிகாரியான இவர் அம்பாறை,

கல்முனை, மட்டக்களப்பு மாவட்டங்களில்

பிரதம கல்வி அதிகாரியாகவும் மன்னார்

மாவட்டக் கல்விப்பணிப்பாளராகவும்கடமை

புரிந்ததுடன் கொழும்பு கல்வியமைச்சிலும்

சிறிது காலம் கடமையாற்றினார்.


அக்கரைப்பற்று மத்திய கல்லூரி, காத்தான்

குடி மத்திய கல்லூரிஆகியவற்றில்பட்டதாரி

ஆசிரியராக கடமையாற்றி அக்கரைப்பற்று

மத்திய கல்லூரியின் அதிபராகவும் கடமை

புரிந்தார்.


வடக்கு- கிழக்கு மாகாண கல்வி செயலராக

கடமையாற்றிய சமயம் மாகாண கல்வி

அமைச்சுக்கான தனியான கட்டிடமொன்றை

அமைத்தார். அதே போல் கிழக்கு மாகாணத்

தில் முதலாவது தேசிய பாடசாலையாக

அக்கரைப்பற்று மத்திய கல்லூரியை உரு

வாக்க கால்கோளாக இருந்தார்.


வடக்கு- கிழக்கு மாகாண விவசாய, கூட்டு

றவு அமைச்சின் செயலாளராகவும் , வகிமா

முகாமைத்து பயிற்சி நிறுவன பணிப்பாளர்

ஆகவும் சிறிது காலம் கடமையாற்றினார்.


அரசியல்வாதிகளுக்கு அடிபணியாத ஒரு

உயர் அதிகாரி.தனக்கு எது நியாயமெனப்

பட்டதோ அதை துணிந்து செய்தார். இவர்

மும்மொழி வித்தகர். இவரது காலதாதில்

தான் வடகிழக்கில் ஆயிரக்கணக்கானவர்

களுக்கு தொண்டர் பயிலுனர் ஆசிரியர்

நியமனத்தை வழங்கினார்.


அரச தாபனக்கோவை, பொதுநிருவாக

சுற்று நிருபங்கள், நிதிப்பிரமாணம் ஆகிய வற்றை துறை போகக் கற்றவர்.


சாய்ந்தமருதுவை சேர்ந்தஅகமதுதுரையின்

மருமகனான இவர்மௌலவியாநஜீமாவின்

( ஓய்வு பெற்ற ஆசிரியை) கணவனான

இவர் 05 பிள்ளைகளின் தந்தையார் ஆவார்.