நூருல் ஹுதா உமர்
கல்வியமைச்சின் சுற்றுநிருபத்துக்கமைய சாய்ந்தமருது கமு/கமு/அல்-ஜலால் வித்தியாலயத்தின் சர்வதேச மொழித்தின நிகழ்வுகள் பாடசாலை அதிபர் ரீ.கே.எம். சிராஜ் அவர்களின் ஆலோசனையின் கீழ், இணைப்பாடவிதானத்துக்கு பொறுப்பான உதவி அதிபர் எம்.பி.எம். பௌசான் அவர்களின் நெறிப்படுத்தலில் நிருவாகத்துக்கு பொறுப்பான பிரதி அதிபர் எம்.எஸ். நபார் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது விசேட பேச்சாளராக பாடசாலை ஆசிரியர் மௌலவி எம்.ஏ.எம். அறூஸ் அவர்கள் கலந்து கொண்டு அரபு மொழியின் முக்கியத்துவம் நடைமுறை ரீதியில் அரபு மொழியின் பயன்பாடு அரபு மொழித்திறனை மேம்படுத்தவும் அரபு மொழியுடன் தொடர்புடைய கலாச்சார மற்றும் அழகியல் அம்சங்களை இனங்கண்டு பரஸ்பர ஒத்துழைப்புடன் கூட்டாக செயற்பட்டு நாட்டின் அபிவிருத்திக்கு சர்வதேச ஒத்துழைப்புகளை பெற்றுக்கொள்ள அரபு மொழியை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்ற விடயங்களை உள்ளடக்கியதாக விசேட சொற்பொழிவை நிகழ்த்தியிருந்தார்.
அத்துடன் அரபு மொழியின் பயன்பாடுகள் தொடர்பில் பாடசாலையின் இஸ்லாம் பாட ஆசிரியர்களின் ஒத்துழைப்புடன் மாணவர்களால் விசேட நிகழ்வுகள் கலை கலாச்சார நிகழ்வுகளாகவும் இடம்பெற்றிருந்தது.
இந்நிகழ்வில் பாடசாலையின் கல்வி அபிவிருத்திக்கு பொறுப்பான பிரதி அதிபர் எம்.ஏ.எம். சிராஜ், கல்வி அபிவிருத்திக்கு பொறுப்பான உதவி அதிபர் ஏ.எம். பாஹிம், இணைப்பாடவிதானத்துக்கு பொறுப்பான உதவி அதிபர் எம்.பி.எம். பௌசான், பகுதித் தலைவர்கள், ஆசிரியர்கள், கல்விசாரா ஊழியர்கள், மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.


Post a Comment
Post a Comment