நாம் கேட்பது எங்கள் விலை மதிப்பற்ற உயிர்களை!




(வி.ரி.சகாதேவராஜா)


அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம்,   அம்பாறை மாவட்ட திருக்கோவிலில் இன்று (27) சனிக்கிழமை வருட இறுதிப்போராட்டத்தை
உணர்வு பூர்வமான ஆர்ப்பாட்டமாக நடாத்தியது.

போராட்ட களத்தில். பலவித பதாதைகளுடன் காணப்பட்ட  சங்கத் தலைவி த. செல்வராணி அங்கு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்...

 நாங்கள் இன்று வருட இறுதியில் ஒன்று கூடி இருக்கின்றோம். எங்களது போராட்டம் 2026இலும்  எங்களது உறவுகளுக்கான நீதி கிடைக்கும் வரை தொடரும்.

எங்களது உறவுகளை தேடி இன்று போராட்டத்தில் காத்திருந்தவர்களில் 450 பேருக்கு  மேற்பட்ட தாய்மார்களே கூடியுள்ளனர்.
நாங்கள் கேட்பது எங்கள் விலை மதிப்பற்ற உயிர்களை.

எமது போராட்டம் சர்வதேசம் வரை சென்றுள்ளது. நீதி கிடைக்கும் வரை இன்னமும் தொடருவோம்.

இன்று தையிட்டியில் எமது நிலங்களை கேட்டால் அடித்து உதைக்கிறார்கள். மதகுரு என்று பார்க்காமல் வேலன் சுவாமியை அடித்து இழுத்து கைதுசெய்துள்ளார்கள்.
மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டிருக்கின்றார்.

இந்த இலங்கை நாட்டில் எமக்கு ஒரு உண்மையான ஒரு பாதுகாப்பில்லை .
எங்கள் நிலங்கள் எங்களுக்கு வேண்டும். என்றார்.