புதிய கணக்காய்வாளர் நாயகமாக ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரி கேணல் ஓ. ஆர்.ராஜசிங்கவை நியமிக்க ஜனாதிபதி செய்த சிபாரிசினை அரசியலமைப்பு பேரவை இன்று (17) நிராகரித்திருக்கிறது.
சபாநாயகர் தலைமையில் கூடிய அரசியலமைப்பு பேரவை கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதே பதவிக்கு, முன்னர் ஜனாதிபதி மேற்கொண்ட சிபாரிசுகளை மேற்படி பேரவை நிராகரித்திருந்தது.
இதேவேளை ஒய்வு பெற்ற படை அதிகாரிகள் நியமனம் அரசால் மேற்கொள்ளப்படுவதும் விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது.


Post a Comment
Post a Comment