மட்டக்களப்பு மாநகர சபை பிரதேசத்தில் ஒரே நாளில் ஏழு பேருக்கு டெங்கு !




 ரீ.எல்.ஜவ்பர்கான்

 மட்டக்களப்பு மாநகர சபை பிரதேசத்தில் ஒரே நாளில் ஏழு பேருக்கு டெங்கு ! தற்போது பரவுவது DHF எனும் குருதிப்பெருக்குடனான ஆபத்தான டெங்கு! கட்டுப்படுத்த சுகாதார அமைச்சினால் பாரிய நடவடிக்கை 

-சுகாதார வைத்திய அதிகாரி (குரல்)



ரீ.எல்.ஜவ்பர்கான் மட்டக்களப்பு 


அண்மையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கைகையடுத்து மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நோய் வேகமாக பரவி வருகிறது. மட்டக்களப்பு மாநகர சபை பிரதேசத்தில் மாத்திரம் நேற்று ஒரே நாளில் ஏழு பேருக்கு டெங்கு நோய் ஏற்பட்டுள்ளதாக மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் இ.உதயகுமார் தெரிவித்தார்  கல்லடி நாம கூட நொச்சு முனை சேத்துக்குடா புளியந்தீவு ஆகிய பகுதிகளில் இவர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். தற்போது பரவும் டெங்கு நோயானது டி எச் எப் என்கின்ற குருவி பெருக்கோடு ஏற்படுகின்ற ஆபத்தான நோயாக காணப்படுகிறது என அவர் மேலும் தெரிவித்தார்.கல்லடி,நாவற்குடா,சேத்துக்குடா, புளியந்தீவு ஆகிய இடங்களில் நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.


மட்டக்களப்பு மாநகர சபை பிரதேசத்தில் டெங்கு நோய் அதிகமாக பரவி டெங்கு குழம்புகள் இணங்காடப்பட்ட இடங்களில் நேற்று முழுநாளும் பாரிய தேர்தல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன .242 வீடுகளில் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.


இதன்போது டெங்கு குடம்பிகள் உருவாகும் வகையில் சுற்றுச் சழலை வைத்திருந்த இடங்களின் உரிமையாளர்கள் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன் பல இடங்களில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டன .

சுற்றுச்சூழலை டெங்கு பரவும் இடங்களாக வைத்திருக்கும் நபர்கள் மீது இன்று முதல் சட்ட நடவடிக்கை எடுக்க ஆரம்பித்துள்ளதாகவும் வைத்திய அதிகாரி மேலும் தெரிவித்தார்