கொழும்பிலிருந்து வெலிமடை நோக்கிப் பயணித்த பேருந்து ஒன்று, ஹல்துமுல்லை - ஊவதென்ன பகுதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் பேருந்தின் சாரதி உயிரிழந்துள்ளதோடு மூவர் காயமடைந்து வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
குறித்த பகுதியில் பேருந்து பயணித்துக் கொண்டிருந்த போது, சாரதியி-ன் ஆசனத்திற்கு அருகிலுள்ள கதவு திடீரெனத் திறந்துள்ளது.
அந்த நேரத்தில் சாரதி அக் கதவை மூட முயற்சி செய்துள்ளார். இதன்போது, பேருந்து கட்டுப்பாட்டை இழந்து அருகிலிருந்த மண் திட்டில் மோதி வீதியிலேயே கவிழ்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
விபத்து நடந்த நேரத்தில் சாரதி ஆசனப்பட்டி அணிந்திருக்கவில்லை எனப் பொலிஸார் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


Post a Comment
Post a Comment