2016 உலக பொருளாதார மாநாடு இன்று சுவிசர்லாந்தின் டாவோஸ் நகரில் ஆரம்பமானது.
உலகம் பூராகவும் இருந்து 2,000க்கும் மேற்பட்ட பொருளியல் நிபுணர்கள் குறித்த மாநாட்டின் ஆரம்ப நிகழ்வில் பங்குபற்றியதாக பிரதமர் காரியாலயம் தெரிவித்துள்ளது.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க விசேட அழைப்பின் பேரில் உலக பொருளாதார மாநாட்டில் கலந்து கொண்டுள்ள நிலையில், இலங்கை அரசியல் தலைவர் ஒருவர் இந்த மாநாட்டில் கலந்து கொண்டமை இதுவே வரலாற்றில் முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
பிரதான நிகழ்வுகளில் பின்னர் உலகளாவிய ரீதியில் மிக சிறந்த நிறுவனங்களின் முக்கியஸ்தர்களை சந்திக்கும் வாய்ப்பு பிரதமருக்கு கிடைத்துள்ளது.
இதேவேளை, சுவீடன் மற்றும் துருக்கி ஆகிய நாடுகளின் பிரதமர்களை சந்தித்து இரு தரப்பு கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
தற்போதைய சுவிட்சர்லாந்துக்கான இலங்கை தூதுவர் ரவிநாத ஆரியசிங்க, சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்ரம மற்றும் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

