உலகையே உலுக்கும் ஸிக்கா வைரசஸ்




உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொடிய ஸிக்கா வைரசின் தாக்குதலுக்கு தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் 2,000 கர்ப்பிணிகள் இலக்காயிருப்பதாக அந்நாட்டு சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
தென்அமெரிக்கா, மத்திய அமெரிக்கா, கரிபீயன் நாடுகள் உட்பட இதுவரை 25 இற்கும் மேற்பட்ட நாடுகளில் ஸிக்கா வைரஸ் பாதிப்பு உள்ளது.
இந்த நாடுகளில் 40 இலட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் பிரேசிலில் மட்டும் 15 இலட்சம் பேர் உள்ளனர்.
இந்நிலையில், கொலம்பியாவில் 20,297 பேருக்கு ஸிக்கா வைரஸ் பாதிப்பு இருப்பதாகவும் இதில் 2,116 பேர் கர்ப்பிணிகள் என்றும் அந்நாட்டு சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.
ஸிக்கா வைரஸ் பாதித்த கர்ப்பிணிகளுக்கு சிறிய தலை, மூளை பாதிப்பு, பார்வை குறைபாடு, நரம்பு மண்டல பாதிப்புகளுடன் குழந்தைகள் பிறக்கின்றன. இதனால் இப்போதைக்கு பெண்கள் கருத்தரிக்க வேண்டாம் என்று பிரேசில் உள்ளிட்ட நாடுகள் அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.