காலை வயலுக்கு சென்றவர் சடலமாக மீட்கப்பட்டார்





அம்பாறை மாவட்டம், திருக்கோவில் சுங்கமன் கிராம வயல் பகுதியில் ஒருவர் கூரிய ஆயுதத்தால் குத்திக் கொலை செய்யப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளார். 

இன்று அதிகாலை வயலுக்கு சென்ற சுங்கமன் கிராமத்தை சேர்ந்த 38 வயதான நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என பொலிசார் தெரிவித்தனர். 

சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவரை இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

திருக்கோவில் பொலிஸார் சம்பவம் குறித்து புலன் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது