கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக வை.எல்.எஸ். ஹமீட் கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் இன்று மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.
அகில இலங்கை மக்கள் காங்கிரசுக்கு புதிய பொது செயலாளர் நியமிப்பதற்கு தடை உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி அமைச்சர் ரிஷாத் உட்பட மேலும் 14 பேருக்கு எதிராக இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அண்மையில் நடைபெற்ற அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் பொதுச் சபைக் கூட்டத்தில் புதிய பொதுச் செயலாளரை நியமித்தமையானது சட்டவிரோதமானது எனவும் அது கட்சியின் யாப்புக்கு முரணானது என்பதால், பொதுச் சபைக் கூட்டத்தின் முடிவுகளை இரத்துச் செய்து தடைவிதித்து உத்தரவிடுமாறும் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் மேலும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அண்மையில் நடைபெற்ற அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் பொதுச் சபைக் கூட்டத்தின் போது கட்சியின் புதிய பொதுச் செயலாளராக எம்.சுபைதீன் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
