போலிகளை (விளம்பரங்களை) நம்பி ஏமாறாதீர்கள் மாணவர்களே!




போலிகளை( விளம்பரங்களை) நம்பி ஏமாறாதீர்கள் மாணவர்களே!

அண்மையில் சட்டமாணி அனுமதிப் பரீட்சைக்கென விளம்பரமொன்று செய்யப்பட்டுள்ளது.குறித்த வளவாளர் ஊடகவியலாளர் என்றும், SLAS, SLEAS வழிகாட்டி என்ற தலைப்பும் இட்டிருந்தனர்.

(எந் நிறுவனத்தில் ஊடகவியலாளராகப் பணிபுரிந்தார்?அல்லது ஊடகவயில் தொடர்பில் எவ்வளவு கால அனுபவம் என்பது பற்றியும் சொல்லவே இல்லை. சட்டம் எங்கு பயின்றார்? இவரது வழிகாட்டலில் சித்தி பெற்றோர் எத்தனை பேர்? என்பதை சற்று தெளிவு படுத்துங்கள் படிப்புக் கடைக்கரார்களே!)

சுமார் 13 மாணவ மாணவியர் சென்றிருந்தனர் இவரது வகுப்பிற்கு. (LL.B) என்றால் என்னவென்று வினவியுள்ளனர்.
விடைதெரியாமல் திக்கு முக்காடிய ஆசான் ” Law ”
என்றராராம்.
(LL.B என்ற 3 எழுத்துக்களுக்கு சட்டம் மாத்திரம் எப்படி வரும் என்ற கேள்வியயைக் கேட்டனர்)
விடை அளிக்க முடியாமல் அசத்தி விட்டாராம் அந்த ஆகாய சூரன்.
Law என்பதை Lex என்று லத்தீனிய மொழியில் அழைப்பர்.

ஆங்கிலத்தில் இரண்டடெழுத்துக்கள் காணப்படினும் லத்தினிய மொழியில் ஒரு கருத்ததைத்தான் போதிக்கும்.இலத்தீன் மொழியில்  (iure bacallario) என்று அழைப்பதை சட்டமாணிப் பட்டதாரி என விளங்கிக் கொள்ள முடியும்.
இத்தகைய ஆசான்கள் SLAS, SLEAS, Samoorthi என்று பாடம் புகட்ட வெளிக்கிளம்பியுள்ளனர். 
அவர்கள் ஏதேனும் சமூக வலைத்தளத்தில் 40404 (ருவிற்றரில்) விளம்பரம் செய்தாலே போதும், மாணவர்களை வசியப்படுத்திக் கொள்வும் செய்கின்றனர்.
உலகில் எல்லாம் தெரிந்தோர் என்று யாருமில்லை.
எல்லாம் தெரியாதவர்கள் என்று யாருமில்லை.
எவரையும் குறை காண்பதற்கான பதிவல்ல.
மாறாக-
படிப்புக்கடை நிறுவனங்கள் காசு உழைப்பதை மாத்திரம் கருத்தில் எடுக்காது, மாணவர்களின் நலன் கருதி, சமூக அக்கறை கொண்டு செயற்படவும் வேண்டுமென்பது 

எமது தாழ்மையான அபிப்பிராயமாகும்.
(வலை இன்னும் விரியும்)