கல்வி அமைச்சர் பதவிக்கு அகில விராஜ் காரியவசம் பொருத்தமற்றவர்



கல்வி அமைச்சர் பதவிக்கு அகில விராஜ் காரியவசம் பொருத்தமற்றவர் என வடமத்திய மாகாண முதலமைச்சர் பேசல ஜயரட்ன குறிப்பிட்டுள்ளார்.
கல்வி அமைச்சர் நேற்று நாடாளுமன்றில் ஆற்றிய உரைக்கு பதிலளிக்கும் வகையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
நாட்டின் கல்வி அமைச்சுப் பதவி பொருத்தமான பிறிதொருவருக்கு வழங்கப்பட வேண்டுமென யோசனை முன்வைக்கின்றேன் எனக் கூறியுள்ளார்.
மாகாண கல்வி அமைச்சிற்காக வழங்கப்படும் பணம் வேறும் தேவைகளுக்கோ சுற்றுலாக்களுக்கோ பயன்படுத்தவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
அவ்வாறு ஈடுபடுத்தப்பட்டிருந்தால் அதனை கல்வி அமைச்சர் நிரூபிக்க வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அனைத்து பதவிகளையும் விட்டு விலகி, அரசியலிலிருந்து ஓய்வு பெறுவதாகத் தெரிவித்துள்ளார்.
வடமத்திய மாகாண கல்வி அமைச்சிற்காக ஒதுக்கப்பட்ட பணத்தை மாகாணசபை உறுப்பினர்கள் வெளிநாட்டு சுற்றுப் பயணங்களுக்குப் பயன்படுத்தி வருவதாக நேற்று கல்வி அமைச்சர் சுமத்திய குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் வகையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்