அரசியல்வாதியின் வீட்டில் உள்ள நாய்கள் கூட அரச நிதியினை துஸ்பிரயோகம் செய்யும் காலத்தில் தனது தனிப்பட்ட பணத்தை செலவளித்து தனிப்பட்ட விஜயம் மேற்கொண்ட முதல் ஜனாதிபதி மைத்திரியாகும்.
சுகவீனமடைந்து சிங்கப்பூர் தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவைப் நேரில் சென்று நலம் விசாரிப்பதற்காக ஜனாதிபதி இன்று சிங்கப்பூருக்கு திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.
எந்தவித பாதுகாப்பு முன்னேற்பாடுகளும் இல்லாது மிகவும் சாதாரணமாக சிங்கப்பூர் சென்றடைந்த ஜனாதிபதி, அமைச்சர் ராஜித சேனாரத்ன சிகிச்சை பெற்றுவரும் வைத்தியசாலைக்கு சாதாரண ஒருவரைப்போல் விஜயம் செய்துள்ளார்.
அதேவேளை சிங்கப்பூர் செல்வதற்கான விமான டிக்கட்டை ஜனாதிபதி தனது சொந்த பணத்தில் பெற்றுகொண்டதாகவும் தகவல்கள் தெரிவிகின்றன.

