லொறி விபத்து - படுங்காயமடைந்த பெண் வைத்தியசாலையில்




க.கிஷாந்தன்)

அட்டன் பொகவந்தலாவ பிரதான வீதியில் டிக்கோயா அலுத்கால பகுதியில் 19.02.2016 அன்று மதியம் 01.00 மணியளவில் சிறிய ரக லொறி ஒன்று பிரதான வீதியில் குடைசாய்ந்ததில் ஒரு பெண்மணி படுங்காயங்களுக்குள்ளாகி டிக்கோயா கிளங்கன் மாவட்ட வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

அட்டனிலிருந்து டிக்கோயா பகுதியை நோக்கி வேகமாக சென்ற மேற்படி சிறிய ரக லொறி அலுத்கால பகுதியில் குடைசாய்ந்து பேரூந்திற்காக நின்றுக்கொண்டிருந்த பெண்ணின் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

படுங்காயங்களுக்குள்ளான பெண் அயலவர்களின் உதவியுடன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.

குறித்த லொறி வேகமாக சென்றதனாலேயே இவ்விபத்து நேர்ந்துள்ளதாக அட்டன் போக்குவரத்து பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை அட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.