ஸீகாவை உலக சுகாதார நெருக்கடியாக அறிவிப்பது பற்றி WHO பரிசீலனை




ஸீகாவை உலக சுகாதார நெருக்கடியாக அறிவிப்பது பற்றி உலக சுகாதார நிறுவனம் பரிசீலனை
ஸீகா கிருமி பரவிவரும் நிகழ்வை ஒரு உலகளாவிய சுகாதார நெருக்கடியாக அறிவிப்பது பற்றி விவாதிப்பதற்காக உலக சுகாதார நிறுவனம் கூடவுள்ளது.
பிரசிலில் மூளை வளர்ச்சி பாதிக்கப்பட்டு மோசமான பிறவிக் கோளாறுகளுடன் பிள்ளைகள் பிறப்பதோடு ஸீகா கிருமி பரவல் தொடர்புபடுத்தப்படும் நிலையில், இக்கிருமி வேகமாகப் பரவி வருவதாகவும், அமெரிக்க கண்ட நாடுகளில் நாற்பது லட்சம் பேசுக்கு இந்த கிருமி பரவலாம் எனவும் உலக சுகாதார நிறுவனம் சென்ற வாரம் எச்சரித்திருந்தது.
உலகளாவிய சுகாதார நெருக்கடியாக பிரகடனம் செய்யப்பட்டால், அது பணம், வளங்கள், அறிவியல் நிபுணத்துவம் போன்றவற்றை ஒன்றுதிரட்டவும், புதிய ஆய்வுகளைத் தொடங்கி தடுப்பு மருந்து ஒன்றை வேகமாக கண்டுபிடிக்கவும் உதவும்.
மேற்கு ஆப்பிரிக்காவில் இபோலா பரவியபோது அதனை ஒரு சுகாதார நெருக்கடியாக அறிவிக்க தாமதம் செய்ததாக உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.