வட கிழக்கிற்கு விசேடமாக நிவாரணங்களை வழங்க முடியாது – வொல்ஸ்ட்ரொம்



வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு விசேடமாக நிதி நிவாரணங்களை வழங்க முடியாது என இலங்கை வந்துள்ள சுவீடன் வெளிவிவகார அமைச்சர் மாக்ரட் வொல்ஸ்ட்ரொம் தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனுடன் நேற்று இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இந்த கருத்தை வெளியிட்டார்.
குறித்த சந்திப்பின் போது வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு நிதி உதவிகள் அவசியம் என முதலமைச்சர், சுவீடன் அமைச்சரிடன் கோரிக்கை விடுத்தார்.
இந்தநிலையில், இலங்கை தற்போது மத்திய வகுப்பு பொருளாதார முறைமைக்கு பழக்கப்பட்டுள்ளதாக சுவீடன் அமைச்சர் மாக்ரட் வொல்ஸ்ட்ரொம் குறிப்பிட்டார்.
சமஸ்டி முறை தொடர்பாக தென்னிலங்கை மற்றும் அரசியல் கட்சிகள் பாரிய அதிருப்தி கொண்டிருக்கும் நிலையில் இந்த விடயம் சாத்தியமளிக்குமா என முதலமைச்சரிடம் அவர் கேள்வியெழுப்பினார்.
எவ்வாறாயினும் ஏற்கனவே சில தடவைகள், வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு சமஸ்டி அடிப்படையிலான நிர்வாகம் தொடர்பில் ஒப்பந்தங்களும் ஏற்படுத்தப்பட்டிருந்தமையை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டினார்.