தொழில்நுட்ப பெருநிறுவனமான ஆப்பிள், 13 ஆண்டுகளில் முதல் முறையாக தனது வருவாயில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளது.
காலாண்டு அடிப்படையிலான வருமானத்தில் முதல் முறையாக ஆப்பிள் இந்நிலையை எதிர்கொண்டுள்ளது.
ஐஃபோன் தனது பிரபலத்தின் உச்சத்தை எட்டிவிட்டது போலத் தெரிகிறது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
காலாண்டு அடிப்படையிலான வருமானத்தில் முதல் முறையாக ஆப்பிள் இந்நிலையை எதிர்கொண்டுள்ளது.
அமெரிக்காவுக்கு அடுத்து சீனாவே ஐஃபோனுக்கு முக்கியமான சந்தையாக இருக்கும் நிலையில், அங்கு விற்பனையில் ஏற்பட்ட வீழ்ச்சி, வருமானத்தில் வீழ்ச்சி ஏற்படவும் பகுதி அளவில் காரணமாகவுள்ளது.
ஐஃபோன் தனது பிரபலத்தின் உச்சத்தை எட்டிவிட்டது போலத் தெரிகிறது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
ஆப்பிளின் வருவாயை தூக்கி நிறுத்தும் நோக்கில், புதிய பொருட்கள் ஏதும் வெளியாவதற்கான அறிகுறிகள் தெரியாத நிலையில், முதலீட்டாளர்கள் கவலையடைந்துள்ளனர் எனவும் தொழில்நுட்ப ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.