திருட்டுக் கும்பலுக்கும், தூய தரப்பினருக்கும் இடையிலேயே பிரச்சினை – ஜனாதிபதி



ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சிக்குள் எவ்வித பிரச்சினையும் இல்லையென எனவும், கட்சியை தோற்கடித்த ஊழல்வாதிகள் உள்ளிட்ட திருட்டுக் கும்பலுக்கும், தூய எண்ணத்துடன் கட்சியின் கொள்கைகளை பின்பற்றி முன்னோக்கி செல்லும் தரப்பினருக்கும் இடையிலேயே பிரச்சினை நிலவுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இன்று முற்பகல் ஜனாதிபதி மாளிகையில் ஊடக நிறுவனங்களின் பிரதானிகளை சந்தித்தபோதே ஜனாதிபதி இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.