பாதிக்கப்பட்டோரைப் பார்த்த வட மாகாண ஆளுநர்



யாழ். பல்கலைக்கழகத்தில் மாணவர்களிடையே இடம்பெற்ற மோதலில் காயமடைந்தவர்களை பார்ப்பதற்கு வட மாகாண ஆளுநர் ரெஜிநோல்ட் குரே இன்று (17) கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு சென்றுள்ளார்.
யாழ். பல்கலைக்கழகத்தில் மாணவர்களிடையே நேற்று பிற்பகல் இடம்பெற்ற மோதலில் காயமடைந்த மாணவர் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு  தேசிய வைத்தியசாலைக்கு நேற்றிரவு மாற்றப்பட்டுள்ளார். இவரை பார்ப்பதற்கு ஆளுநர் ரெஜிநோல்ட் குரே அங்கு சென்றுள்ளார்.