ஏழு கன்னியில் காணாமற்போனோர் காப்பாற்றப்பட்டனர்



ஹட்டன் நோர்ட்டன்பிரிஜ் ஏழு கன்னி மலைத்தொடரில் காணாமற்போன பல்கலைக்கழக மாணவர்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர்.
ஏழு கன்னி மலைத் தொடரில் காணாமற்போன மாணவர்களை தேடும் நடவடிக்கைகள் நேற்றிரவு முதல் ஆரம்ப்பிக்கப்பட்டதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ஜெயநாத் ஜெயவீர குறிப்பிட்டுள்ளார்.
மலைத் தொடரை பார்வையிடச் சென்ற 05 மாணவர்களே இவ்வாறு காணாமற்போயுள்ளனர்.
காணாமற்போயுள்ள பல்கலைக்கழக மாணவர்களில் இரண்டு பேர் பிரான்ஸ் பிரஜைகள் என பொலிஸார் குறிப்பிட்டனர்.