இலங்கையில் 238 அடி உயரம் கொண்ட பிரம்மாண்ட கிறிஸ்துமஸ் மரம் உருவாக்கப்பட்டுள்ளது.
கொழும்புவில் வைக்கப்பட்டுள்ள இந்த கிறிஸ்துமஸ் மரத்தை அமைச்சர் அர்ஜுன ரணதுங்கா பார்வையாளர்களுக்கு திறந்துவைத்தார். இரும்புக் கம்பி மற்றும் இரும்பு வளையங்களால் இம்மரம் உருவாக்கப்பட்டுள்ளது. 8 லட்சம் எல்இடி விளக்குகளும், 20 லட்சம் வண்ண பைன் கூம்புகளும் பயன்படுத்தப்பட்டுள்ளன. 10 நாட்களுக்கு காட்சிக்கு வைக்கப்படும் இந்த கிறிஸ்துமஸ் மரம் கின்னஸ் சாதனைக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

