(படுவான் பாலகன்)
கிழக்கு மாகாணசபைக்கு 2016ம் ஆண்டு 376கோடி ரூபாய் பணம் அபிவிருத்திற்காக ஒதுக்கப்பட்டது. அதில் இன்றைய தினம் வரை 165கோடி ரூபாய் பணமாக வழங்கப்பட்டுள்ளது. ஏனைய 211கோடி ரூபாய் பணத்தினை மத்திய அரசு இன்னும் வழங்கவில்லை என கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்ணம் இன்று(23) வெள்ளிக்கிழமை குறிப்பிட்டார்.
கிழக்கு மாகாணசபையின் 2016ம் ஆண்டு அபிவிருத்தி திட்ட நிதிதொடர்பில் கேட்டபோதே இதனை தெரிவித்தார்.
மாகாணசபை உறுப்பினர் மேலும் இதுதொடர்பில் கூறுகையில், கிழக்கு மாகாணசபை செய்த வேலைகளுக்கு அதற்காக ஒதுக்கப்பட்ட பணம் வழங்கப்படாமல் முடக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இவ்வாறான போக்கு மாகாணசபையை முடக்கும் திட்டமா? என சந்தேகிக்க தோன்றுகின்றது. விசேட நிதியை பெறுவதற்கான வேலைகளை அமைச்சர் வாரியம் செய்ய வேண்டும். அவ்வாறு இல்லாத பட்சத்தில் நிதியை வழங்குவதற்கு கிழக்கு மாகாணசபைக்கு இரண்டு வருடங்கள் தேவை. அவ்வாறு இரண்டு வருடங்கள் கழிந்தாலும் கடன் அடிப்படையிலேயே இயங்க வேண்டிய நிலைமை கிழக்கு மாகாணசபைக்கு ஏற்படும். எனவும் குறிப்பிட்டார்.

