உச்சத்தை எட்டிய தெற்கு அதிவேக வீதி வருமானம்



தெற்கு அதிவேக வீதியில் நேற்றைய தினம் (24) மாத்திரம் ரூபா 18.85 மில்லியன் ரூபா இலாபமாக பெறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இது, இதுவரை ஒரு நாளில் ஈட்டிய அதிகூடிய வருமானமாகும் என வீதி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.
கிறிஸ்மஸ், மற்றும் புது வருட பண்டிகை தினத்தையொட்டி, அதிகளவான வாகனங்கள் குறித்த வீதியில் பயணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் நேற்றைய தினம் மாத்திரம் 61, 874 வாகனங்கள், தெற்கு அதிவேக வீதியில் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது