வl மத்திய அம்பியுலன்ஸ் சாரதிகள் வேலை நிறுத்தத்தில் ?



வடமத்திய மாகாண சுகாதார சேவை சாரதிகள் ஆரம்பித்துள்ள வேலைநிறுத்த போராட்டத்தை ஆதரிக்கும் விதமாக எதிர்வரும் 28ம் திகதி முதல் பரந்தளவிலான வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக அரச சுகாதார சேவை அம்பியூலன்ஸ் வண்டி சாரதிகளின் சங்கம் கூறியுள்ளது. 

கடந்த 21ம் திகதி வேலைநிறுத்த போராட்டத்தை ஆரம்பித்த வடமத்திய மாகாண சுகாதார சேவை சாரதிகள் 22ம் திகதி முதல் சத்தியாக்கிரக போராட்டத்தை ஆரம்பித்தனர். 

வடமத்திய மாகாண சுகாதார சாரதிகள் சேவையை, திணைக்கள சேவையாக மாற்றுமாறு அதிகாரிகளை வலியுறுத்தி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருப்பதாக அத தெரண செய்தியாளர் கூறினார். 

எவ்வாறாயினும் வடமத்திய மாகாண வைத்தியசாலைகளின் அம்பியூலன்ஸ் சேவைக்காக தரைப்படை அதிகாரிகள் இணைத்துக் கொள்ளப்பட்டிருப்பதாகவும் அத தெரண செய்தியாளர் கூறினார்.