தேவையினை உணர்ந்து பணி



-க.கிஷாந்தன்-

இன்று பல தலைவர்கள் தமது கட்சிக்கு வந்தாலே அபிவிருத்திப்பணிகளை முன்னெடுப்பதாக தெரிவிக்கின்றனர். ஆனால் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அபிவிருத்திப் பணிகளை முன்னெடுக்கும் போது அன்று முதல் இன்று வரை தொழிற்சங்க பேதங்களோ கட்சிப் பேதங்களோ பார்ப்பதில்லை.

சிலர் டிசம்பர், ஜீன் மாதம் வந்து விட்டால் அல்லது தேர்தல் வந்துவிட்டால் மாத்திரம் தான் அபிவிருத்திகளை செய்வார்கள் ஆனால் மக்கள் தேவையை உணர்ந்து மக்களுக்காக சேவையாற்றும் ஒரே மக்கள் அமைப்பு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மட்டும்தான் என்பதனை மக்கள் நன்கு உணர்ந்துள்ளார்கள் என மத்திய மாகாண நீர்ப்பாசன, மீன்பிடி விவசாயம், தோட்ட உட்கட்டமைப்பு இந்து காலாசார அமைச்சர் எம்.ரமேஸ்வரன் தெரிவித்தார்.

பூண்டுலோயா பகுதியில் உள்ள எரோ மேற்பிரிவு ஆலயத்துக்கு சிலைகள் வழங்கி வைக்கபட்டதுடன் அத்தோட்டத்திற்கு செல்லும் வீதி இன்ட்லொக் கற்கள் பதித்து புனரமைக்கபட்ட வீதியினை திறந்து வைத்து உரையாற்றும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

மலையகத்தில் இன்று சில தொழிற்சங்கள் எங்கள் தொழிற்சங்கங்கள் எங்கள் தொழிற்சங்கத்திற்கு வந்தால் தான் வீடு என்கிறார்களாம். இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்கும் போது ஒரு போது தொழிற்சங்க பேதம் பார்த்ததில்லை. எம்மக்கள் என்ற நினைத்தது தலைவர் முத்துசிவலிங்கம் ஐயா மலையத்தில் அதிகமான தோட்டங்களுக்கு மின்சாரம வழங்கினார். 

அவர் ஒரு போதும் இவர் இந்த கட்சிகாரர் என்று பாரத்து மின்சாரம் வழங்கியதில்லை. தலைவர் தொண்டமானும் அவருடைய நிதியில் அபிவிருத்தி பணிகளை மேற்கொள்ளும் போது எங்கு தேவை இருகிறதோ அங்கு வழங்குமாறே தெரிவித்துள்ளார். இன்று என்றுமில்லாத தோட்டத்தொழிலாளர்கள் நெருக்கடிக்கு உள்ளாகி உள்ளார்கள் தோட்ட நிர்வாகங்கள் தன்னிச்சையாக செயப்பட்டு 18 கிலோ 20 கிலோ தேயிலை கொழுந்து பறித்துவருமாறு தெரிவித்து வருகின்றனர். 

ஆனால் கூட்டு ஒப்பந்தத்தில் நோம் எவ்வாறு குறிப்பிடப்பட்டிருக்கின்றதோ அந்த நிறையே தொழிலாளர்கள் எடுக்க வேண்டும் அவ்வாறு இல்லாத பட்சத்தில் தோட்டகமிட்டி தலைவர்கள் கலந்து பேசிய பின்னரே நோம் தீர்மானிக்கப்பட வேண்டும். அவ்வாறு இல்லாது தோட்டநிர்வாகம் செயப்பட்டால் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் நடவடிக்கை எடுக்கும் என அவர் மேலும் தெரிவித்தார்.

இந்நிகழ்வுக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மாவட்ட தலைவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.