சகவாழ்வு மற்றும் சமூக நலன்புரிக்கான நிரந்தர செய்தியை வாழ்க்கைக்கான முன்னுதாரணமாகக் கொண்டு, நத்தார் பண்டிகையைக் கொண்டாட அனைவரும் ஒன்றுபட வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தமது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
அனைவர் மீதும் அன்பை வெளிப்படுத்த வேண்டும் என்ற செய்தியை மக்கள் மயப்படுத்த வேண்டுமென ஜனாதிபதி தமது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
மத, கலாசார, பல்லினத்துவத்தை மதித்து அனைவருடனும் நல்லிணக்கத்துடன் வாழ்வதற்கு இந்த நத்தார் தினத்தில் உறுதிபூண வேண்டுமென பிரதமர் ரணில் விக்ரமசிங்க தமது நத்தார் தின வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் வாழும் மக்களுக்கு உதவிகளை வழங்குவதுடன், நாட்டில் நிலையான சமாதானம் மற்றும் நல்லிணக்கம் என்பவற்றை ஏற்படுத்துவதற்காக ஒற்றுமையாக பணியாற்றுவதற்கு முன்வருமாறு எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தமது வாழ்த்துச் செய்தியில் வலியுறுத்தியுள்ளார்.

